சவுதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு அந்த நாடு மனிதநேய அடிப்படையில் பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து பரிசீலிக்கவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடு;த்துள்ளார்.
சமூக ஊடகபதிவொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள சனத்ஜெயசூரிய இந்த மனிதநேயக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதில் மத இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் என்ற ரீதியில் எமது மதம் அல்லது இனத்தை பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றுபட்டுநிற்கின்றோம்,எமது சக இலங்கையரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தயவு செய்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
