ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார் என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளைக்கான வாழ்த்துச்செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மிகவும் அசாதாரணமான மற்றும் தகுதியான நோபால் பரிசை பெற்றுள்ள நவி பிள்ளைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நவி எனக்கு வழிகாட்டியாகவும் நண்பராகவும் திகழ்கின்றார்.எனது மறைந்த மாமனாரின் நினைவாக யோர்க் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற முதலாவது என் சிவலிங்கம் நினைவு சொற்பொழிவை அவர் ஆற்றியமை எனக்கு கிடைத்த பெருமையாகும்.
அவரது கனடா வருகையை முன்னிட்டு தென்னாபிரிக்க இனவெறி எதிர்ப்பு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டு ஓவியர் விக்டர் இம்மானுவேல் வரைந்த ஒரு தேசத்தின் ஜனனம் என்ற ஓவியம் நவிபிள்ளையிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் தமிழ் சமூகமானது ஓஸ்கூட் சட்டக்கல்லூhயில் அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு கல்வி உதவித்தொகையை நிறுவியது.

மோரிஷ் அரசபள்ளிக்கு நவிப்பிள்ளை வருகை தந்து இளைஞர்களுடன் உரையாடியது அன்று அண்ணாந்து பார்த்த குழந்தைகளுக்கு ( இன்று பெரியவர்களுக்கு ) ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் கனேடிய சமூகத்திலிருந்து – நன்றி நவி
நீங்கள் தொட்டுச்சென்ற எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளீர்கள என குறிப்பிட்டுள்ளார்
