அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கான சீருடைகளுடன் தங்கள் மத ஆடைகளையும் அணிவதற்கு தெளிவான அனுமதியளிக்கும் வகையில் புதிய சுற்றுநிரூபமொன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பொதுநிர்வாக அமைச்சருக்கு வழங்கியுள்ள இந்த பரிந்துரையில் அரச அதிகாரிகள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளை ஆற்றும்போது தங்களை அடையாளம் காணக்கூடியவகையி;ல் இருப்பதை உறுதி செய்யும் அதேவேளை அதேவேளை அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் தெளிவான வழிகாட்டுதல்களுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள்,ஊழியர்கள் தங்கள் உத்தியோகபூர்வ சீருடைகளுடன் தங்களது ஏனைய கண்ணியமான உடைகள் உட்பட தங்களது மத நம்பிக்கைகளுக்கு அமைவான ஆடைகளை அணிய அனுமதிக்கும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிலவிய சர்ச்சை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணையை தொடர்ந்தே இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.