ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தண்டனையை விட அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை கொழும்பில் பௌத்தமகாசபை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றிய சரத் என்சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது.இது ஒரு சாதாரணமான சூழ்நிலை அல்ல.
மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேனவிற்கு கடிதமொன்றை எழுதிய நீதவான் இவ்வாறான சம்பவமொன்று நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது,தனது தண்டனை வழங்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளதால்,இந்த விவகாரத்தை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிக்கல் இங்குதான் உள்ளது,இதிலுள்ள சட்டபூர்வ நிலைப்பாடு என்ன?நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை 1500க்கு மேற்படாமல் அபராதம்,அல்லது 18 மாதங்களுக்கு மிகாமல் சாதாரண சிறைத்தண்டனை மாத்திரமே அதுவும் ஒன்றரை வருடங்களின் ஆண்டுகள் மாத்திரமே.
சட்டத்தில் 18 மாதங்களுக்கு மாத்திரதே தண்டனை உள்ள நிலையில் நீதவான் ஆறு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்துள்ளார், அந்த சரத்து மேல்முறையீட்டு நீதிமன்ற அவமதிப்பிற்கு மாத்திரமே பொருந்தும்,ஏனைய விடயங்கள் குறித்து எந்த சரத்தும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பும் நியாயமானது என சரத்என் சில்வா தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.