கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த மதகுருமார் மீதான தாக்குதலை கண்டித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மதஅனுஷ்டானங்களில் ஈடுபட்டிருந்த பௌத்தமதகுருமார் மீது அரசாங்கம் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி பௌத்தமதகுருமாரை பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மத ஐக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்குமாறும் கோரியுள்ளார்.
பொலிஸார் பௌத்தமதகுருமாரின் தற்காலிக கூடாரங்களை அகற்றினார்கள் எனவும் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.