அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் -முன்னிலை சோசலிஷ கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுதிட்டம் – யாழ்ப்பாணத்தில் குமார் குணரட்ணம்

ஜேஆர் சந்திரிகா கோட்டா மகிந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயணிக்கின்றது என முன்னிலை சோசலிஷ கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்ணம் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்த கலந்துரையாடல் மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது

2024 இல் ஒரு புதிய மாற்றம் இடம்பெற்றதுஇஅனைத்து மக்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள்.
ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் எந்த வித மாற்றமும் இடம்பெறவில்லை.
தேசிய மக்கள் சக்தி நீண்டகாலமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளது ஆனால் தற்போது முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளையே தொடர்கின்றது.
தெற்கில் இனவாதம் இன்னொரு வகையில் வெளிவருகின்றதுஇ அதற்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம்.இந்த அரசாங்கம் பலவிதமான நம்பிக்கைகளை வழங்கியது ஆனால் இன்று 22வது திருத்தம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் போன்றஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.
இதேவழியில் ஜேஆரும் கோட்டாபயவும் சந்திரிகாவும் மகிந்தவும் பயணித்தனர். கடந்த கால அரசாங்கங்கள் சென்ற வழியிலேயே இந்த அரசாங்கமும் செல்கின்றது.
2024 இல் ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தல் குறித்தே மக்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்இநவம்பரில் பெரும் நம்பிக்கையில் சிறுபான்மை மக்கள் தாங்கள் அதுவரை ஆதரித்த வந்த கட்சிகளுக்கு எதிராக வாக்களித்தார்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு வித தீர்வு முயற்சியையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லைஜனநாயக விரோத பாதையிலேயே பயணிக்கின்றது.
அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவருகின்றதுஇசர்வதேச நாணயநிதியத்தின் உத்தரவில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது அதனை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டத்தை கொண்டுவரமுயல்கின்றது
முன்னிலை சோசலிஷ கட்சி இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்காலதீர்வு திட்டத்தில் பல்வேறு தேசிய இனங்களுக்கான சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் கொண்ட பிரதேசக் கட்டமைப்பை முன்மொழிகின்றது .
என குமார் குணரட்ணம் தெரிவித்தார்

May be an image of text

May be an image of dais and text

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Yoshitha-new
யோசிதவின் வெளிநாட்டு பயிற்சி – நிதியை ஒதுக்குமாறு கடற்படைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
ANURA10
துப்பாக்கிகளுடன் கைதான நபர் – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?
anura may 26
நீதிமன்ற தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் - பதுளையில் அனுர
kassapa
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? பொலிஸார் தெரிவிப்பது என்ன?
Sajith-farmers
விகாரமகாதேவி பூங்காவில் பொலிஸார் பௌத்தமதகுருமார் மீது தாக்குதல்- சஜித்
FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?