ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய மறுத்தால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வோம் – கஸ்ஸப்ப தேரர்
பொதுபல சேனாவின் ஞானசாரதேரரை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க விடுதலை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய முயல்வார்கள் என கஸ்ஸப்ப தேரர் எச்சரித்துள்ளார்.
விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியி;ல் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நிபந்தனையற்ற விடுதலையை பெற்றுக்கொள்வதே எங்கள் போராட்டத்தின் நோக்கம்.
அரசாங்கம் எங்கள் நோக்கத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளது,பௌத்தமதகுருமார் தங்களை அதிகாரத்திலிருந்து அகற்ற முயல்கின்றனர் என அஞ்சுகின்றது.
நாங்கள் அவர்களை கவிழ்ப்பதற்காக வந்திருக்கின்றோம் என அரசாங்கம் நினைக்கின்றது ஆனால் ஞானசாரதேரரை விடுதலை செய்யும் முக்கிய பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளது.
ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களின் வேண்டுகோள்களை நிராகரித்துவந்தால் நாங்கள் வேறு வழிமுறைகளை நாடாவேண்டியிருக்கும்,
ஜனாதிபதி தொடர்ந்தும் பிடிவாதமாகயிருந்தால்,ஞானசாரதேரரை சட்டரீதியில் விடுதலை செய்ய வழியில்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது நாங்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவேண்டும் என தேரர் தெரிவித்துள்ளார்.
(ரி)