நிருபர்
நீதியமைச்சர்தெரிவிப்பதற்கு மாறாக ஒரு நபர் ஆடை அணியும் பாணியை வைத்து ஒரு பொலிஸ் அதிகாரி நினைத்தால் அந்த நபரை கைதுசெய்வதற்கான அதிகாரத்தை ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குறித்த சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்
அவர் சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்மொழியப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்தின் பிரிவு 42 இன் கீழ் ஒரு நபர் அணியும் உடைஇ கைச்சைகைஇபயன்படுத்தும் மொழி அல்லது பச்சை குத்துதல் ஆகியவை ஒரு குற்றவியல் குழுவை சேர்ந்தவை என்பதை ஆரம்ப கைதின்போது ஒரு பொலிஸ் அதிகாரி எவ்வாறு தீர்மானிப்பார் என்ற விவாதம் முக்கியமானது.
ஒரு நபர் அணியும் உடை மொழி பச்சை குத்துதல் போன்றவை ஒரு குற்றவியல் குழுவை சேர்ந்தவை என்பதை ஒரு பொலிஸ் அதிகாரி தனது தனிப்பட்ட கருத்து மற்றும் பாகுபாடான எண்ணங்களின் அடிப்படையிலேயே தீர்மானிப்பார்.அதாவது தன்னிச்சையான பாகுபடான காரணிகளாகும்.
இதன் விளைவாக ஒரு நபரின் உடை பச்சை குத்துதல் சைகை போன்ற ஒரு காரணியை மாத்திரம் வைத்து அந்த நேரத்தில் அவர் ஒரு குற்றக்கும்பலை சேர்ந்தவர் என்பதை பொலிஸார் தீர்மானித்தால் அது அந்த நபர் கைதுசெய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.
இலங்கை பொலிஸார் மனித உரிமை மீறல்கள் குறித்த நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நிலையில் இது மனித உரிமை துஸ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என நாங்கள் நினைப்பது சாத்தியமற்ற கற்பனையல்ல.
பொலிஸார் தடுத்துவைப்பதற்கான நீதிமன்ற ஆணையை பெறாவிட்டாலும் கூட இவ்வாறான தன்னிச்சையான கைது இடம்பெறக்கூடும் என்ற உண்மையானது பாரிய மனித உரிமை மீறல் சிக்கலாகும்.
பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவை பெறுவதற்கு அனுமதிகோரினால் அதனை நிராகரிப்பதற்கான உரிமையை இந்த சட்டமூலம் நீதவானுக்கு வழங்கவில்லை.
இதன் காரணமாக நியாயமான சந்தேகங்களோ அல்லது ஆதாரங்களோ இன்றி ஒரு நபரை குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது தடுப்புகாவலில் வைக்க முடியும்.