பொதுபலசேனாவின் ஞானசார தேரர் காவியுடையுடனேயே 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிகளின் படி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,என தெரிவித்துள்ள அமைச்சர் ஞானசாரதேரர் எந்த பௌத்தமத பிரிவை சேர்ந்தவரோ அந்த பிரிவின் பீடாதிபதிக்கு ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வழிகாட்டுதல்களை கோரி கடிதமொன்றை அனுப்பியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் உரிய ஆலோசனைகளை கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.