மருத்துவசிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த திகதிகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் அவரதுமனுவை தள்ளுபடி செய்துள்ளது.
குறிப்பிட்ட மனுமீதான விசாரணைகள் புதன்கிழமை இடம்பெற்றவேளை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடத்திவரும் விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராக பெயரிடப்படவில்லை என நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
தேவையேற்பட்டால் மனிதாபிமான அடிப்படையில் பயணதடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அவர் தெரிவித்தார்