தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு ஒரு சர்வதேச நீதி கிடைப்பதற்கும் சர்வதேச குற்றவியல் விசாரணை இடம்பெறுவதற்கும் இந்தியா இடையூறாகயிருக்ககூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
யாழ்போதனா வைத்தியசாலையில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39 வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இன்றைய தினம் இந்திய படைகளால் 1987ம் ஆண்டு யாழ்போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மருத்துவர்கள் தாதியர்கள் ஊழியர்களின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நோயாளிகள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் அமைதிப்படை என்ற பெயரிலே இந்திய இராணுவம் எங்களுடைய மண்ணிலே காலடி எடுத்துவைத்திருந்தது.
அந்தவேளையில் எங்களுடைய மக்கள் எங்கள் மண்விடுதலை பெறப்போகின்றதுஇநாங்கள் எங்கள் மண்ணில் சுதந்திரமாக கௌரவாமாக பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என பெருங்கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.
இந்திய படைகளுக்கு பல இடங்களிலே எங்கள் மக்கள் மாலை அணிவித்து பெரும் உற்சாக வரவேற்பை வழங்கியிருந்தார்கள்.ஆனால் அவ்வாறு வந்த படையினர் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே தங்களுடைய ஆயுதங்களை எங்கள் மக்களுக்கு எதிராக திருப்பியிருந்தார்கள்.
அதில் ஒரு சம்பவம் இந்த யாழ்ப்பாணம் வைத்தியசாலை படுகொலை.வைத்தியசாலைக்குள் இவ்வாறான படுகொலை இடம்பெற்றிருந்தது.
அமைதிகாக்க என வந்த இந்திய படையினர் இந்த வைத்தியாசாலைக்குள்ளேயே வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதிமார்கள் நோயாளிகள் என பெருமளவிலானவர்களை சுட்டுகொன்றுகுவித்திருந்தார்கள்.
அந்த சம்பவம் இடம்பெற்று இன்று 39வருடங்கள் அந்த நினைவேந்தல் இடம்பெற்றிருக்கின்றது.
இன்றுவரை இந்தியா செய்திருக்ககூடிய அந்த தவறு சரிசெய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்கு ஒரு சுயாட்சி பெற்றுதருவதாக தெரிவித்துதான் இந்திய படையினர் இந்த மண்ணிலே காலடி எடுத்துவைத்திருந்தார்கள்.முதல்கட்டமாக ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தி தருவதாகவும் படிப்படியாக எங்கள் தேசத்திற்கு சுயநிர்ணய அடிப்படையில் தமிழ்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலையான தீர்வை உருவாக்கி தருவதாகவும் வந்தவர்கள் வாக்குறுதியளித்திருந்தார்கள்.
ஆனால் இன்று 39 வருடங்கள் கடந்தும் நாங்கள் சிங்கள பேரினவாதத்தினால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்இஅடக்க ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் எங்கள் தேசத்தை முற்றாக கபளீகரம் செய்கின்றஇசிங்கள பௌத்மயமாக்குகின்ற செயற்பாடுகளை தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்திலே நாங்கள் இந்திய அரசிடம் மீளவும் கேட்டுக்கொள்கிறோம். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திலே தமிழ் மக்களை புறக்கணித்து இந்தியா இலங்கை அரசிற்கு மரபகமாக ஒப்புமிட்டிருந்தார்கள். அது தமிழ் மக்களுக்காக அவர்கள் கையெழுப்பிட்டதாக சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறு அந்த ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் இருக்கின்ற பொழுதும் எங்களுக்கு எதிராக இந்த அழிவுகள் தொடர்ந்து கொண்டிருப்பதை தொடர்ந்து இந்தியா அனுமதிக்கக்கூடாது.
இந்தியா எங்களுடைய தேசத்தை அங்கீகரித்து எங்களுடைய சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு சுய ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இலங்கையினுடைய ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டுவந்து ஒப்புவதற்குஇ புதிதாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்து ஒப்புவதற்கு அனுர அரசாங்கம் தீவிரமாக முயன்று கொண்டிருக்கின்றது.
அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும். எங்களுடைய மண்ணிலே நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றங்கள் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகள் அனுர அரசாங்கத்தினாலே தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக முல்லைத்தீவிலே குருந்தூர் வையா என்ற திட்டத்தின் மூலமாகவும் மன்னாரில் பௌத்திகாவிலே தள்மழ்வத்து வையா திட்டம் மூலமாகவும் மற்ற மாகலப்பு மாவட்டத்திலே மயிலத்தமடு மாதவனை போன்ற பகுதிகளிலும் பாரிய பல்லாயிரக்கணக்கான சிங்களவர்களை ஒரு மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் குடியேற்றுவதற்கான ஒரு வேலை திட்டம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றது.
அதனைவிட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கபளீகரம் செய்வதற்கான வேலை திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரிலே முழுக்க முழுக்க சிங்கள பௌத்தமயமாகிக்கொண்டு இருக்கின்றது. இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியா உடனடி இந்தியா தலையீடுகளை செய்து தமிழர்களுடைய தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்.
எங்கள் மீது நடந்த இந்த படுகொலைகளுக்கெல்லாம் ஒரு சர்வதேச நீதி ஏற்படுத்தப்படுவதற்கு ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை நோக்கி கொண்டு செல்வதற்கும் இந்தியா இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதையும் இந்த இடத்திலே கேட்டுக்கொள்கிறோம்.”