இலங்கை அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்வதும் குற்றமாக கருதப்படலாம் என முன்னிலை சோலிஸ கட்சியின் பொதுச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் சட்டமூலத்தில் ஏன் இரண்டாவது சட்டவிரோத திருமணம் பாதுகாக்கபட்ட வனங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் உரிமம் பெறாத சூதாட்டம் போன்றவை கூட குறிப்பிடப்பட்டுள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணம் காரணமாக சாதாரண பொதுமக்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், வழமையாக ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் என கருதப்படாத குற்றங்களுக்காக கூட அவர்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளகூடும் என அவர் எச்சரித்துள்ளார்.