பேராசிரியர் ராஜ்சோமதேவ மனச்சாட்சிப்படி நடக்கவில்லை பணத்திற்காக அல்லது தனது இனத்தை காப்பாற்ற செயற்படுகின்றார்- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

பேராசிரியர் ராஜ்சோமதேவ மனச்சாட்சிப்படி நடக்கவில்லை அவர் பணத்திற்காகவே அல்லது தனது இனத்தை காப்பாற்றவோ இப்படி நடந்துகொள்கின்றார் உண்மைக்குமாறான இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளார் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயசந்திரா தெரிவித்துள்ளார்
செம்மணி மனித புதைகுழி குறித்த இடைக்கால அறிக்கையை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றாக நிராகரித்துள்ளதுடன் நவம்பர் 16ம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்த செய்தியாளர் மாநாட்டில் மனுவல் உதயசந்திரா மேலும் தெரிவித்ததாவது.

மன்னாரில் இரண்டு மனித புதைகுழிகள் உள்ளன, ஒன்று சாதொச மனித புதைகுழி மற்றையது திருக்கேதீஸ்வரம் புதைகுழி, திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் 53 மனித எலும்புக்கூடுகளையும் சாதொச மனித புதைகுழியில் 328 மனித எலும்புக்கூடுகளையும் எடுத்தனர்.
அதேபோன்று கொக்குத்தொடுவாயில் 53 செம்மணியில் 583 மனித எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர்.
எல்லா இடத்திலேயும் அவர் ஒரே மாதிரிதான் தெரிவித்திருக்கின்றார் தொற்றுநோயால் இறந்தவர்களைதான் புதைத்திருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார், தொற்றுநோயால் உயிரிழந்தவர்களை கொண்டுபோய் புதைப்பது என்றால் அதற்கும் ஒரு சமய வழிபாடு இருக்கு எந்த இனம் மதம் மொழியாக இருந்தாலும் சமய வழிபாடு இருக்கு.
ஒருவன் இறந்தால் அவன் பணக்காரன் என்றாலும் சரி ஏழை என்றாலும் சரி அவனுக்கு செய்யவேண்டிய முறைமைகளை செய்துதான் அவனை புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள்.அது எங்கள் பண்பாடு.
ஆனால் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் இருந்தாவாறும் படுத்தவாறும் நின்றவாறும் பால்குடித்தவாறும் கம்பியால் கட்டியும் காணப்படுகின்றன.
அடித்திருக்கின்றார்கள் மண்டை ஓடுகளை நொருக்கியிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் எப்படி அவர்கள் நாங்கள் தொற்றுநோயினால் இறந்தவர்களை புதைத்திருக்கின்றோம் என சொல்ல முடியும், எல்லா மனிதபுதைகுழி தொடர்பிலும் அவர் விடுத்த அறிக்கை இதுதான்.
மன்னாரில் ஒல்லாந்தர் காலத்து மனித எச்சங்கள் 450 வருடங்களுக்கு முந்தையது என தெரிவித்தார்.
ஆனால் அதற்குள் 85;ம் ஆண்டு பிஸ்கட் உறை காணப்பட்டது,அதற்கு என்ன பதில் வந்தது என்றால் எலிகொண்டு போய் வைத்திருக்கும் என்று எலிக்கு வேலை இல்லாமல் அந்த பிஸ்கட் உறையை மாத்திரமா கொண்டுபோய் வைத்திருக்கும்.
இவர் அரசாங்கத்தை காப்பாற்றுவது என்றால் காப்பாற்றட்;டும் எங்களை ஏன் தொடர்ந்து ஏமாற்றுகின்றார்.
இப்ப ஒரு இடத்தில கிடங்கு வெட்டுவது என்றாலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான பாதிக்கப்பட்டவர்களான எங்களுக்கு பயமாக உள்ளது – அதற்குள் புதைகுழி வந்துவிடுமோ என அஞ்சுகின்றோம்.எங்கட பிள்ளைகள் வந்துவிடுவினமோ என நெஞ்சு பதறுகின்றது.
அப்படி நாங்கள் துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற தருணத்திலே சும்மா இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் விடுவது என்றால் என்ன கதை இது?
அவர் மனச்சாட்சிபடி நடக்கவில்லை அவர் காசுக்காவோ தன்னுடைய இனத்தை பாதுகாக்கவோ சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
அவ்வளவும் எங்கள் உறவுகள்தான் காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே என்ன செய்தீர்கள் ஒருவரை கூட நாங்கள் காணவில்லை.
நாங்கள் வீதிகளில் நி;ன்று போராடிக்கொண்டிருக்கின்றோம் ஒரு உறவை கூட நாங்கள் காணவில்லை எலும்புக்கூடுகளைதான் பார்க்கின்றோம் அவர்கள் எங்கே?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ships iran
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே 21 ஈரானிய கப்பல்கள் -இராஜதந்திர சமநிலையை பேணுவதற்கு சிரமப்படும் இலங்கை
harsha kumara
ஹோமாகம பொலிஸார் ஹர்சகுமாரவை கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் எங்கே ?வசந்த முதலிகே கேள்வி
sri-lanka-monk-meeting
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருவின் இரகசிய சந்திப்பு – ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
kassapa hotel
நான் ஐந்து நட்சத்திரஹோட்டலுக்கு சென்றது தவறான விடயமா? ஏன் சர்ச்சையை உருவாக்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
chemmani11111155555555555
செம்மணியில் பெருந்தொற்று அல்லது இயற்கை பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததாக 'ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை
gajendran
அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்
harsha kumara
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு
iran ships
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
malwathu asgri
மகாநாயக்கதேரர்கள் தெரிவித்துள்ளது என்ன?
monks pro2
ஞானசார தேரரின் விடுதலையை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் - பௌத்தமதகுருமார்