மகாநாயக்கதேரர்கள் தெரிவித்துள்ளது என்ன?

இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வெலிகம அத்தத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில், பௌத்த துறவிகளுக்கான துறவு ஒழுக்கத்தைப் பேணவும், பிக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவத்தையும் மரியாதையையும் பாதுகாக்குமாறும் மகா சங்கத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.

அக்டோபர் 25 ஆம் திகதியிடப்பட்ட இந்த அறிக்கை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள், அமரபுர மகா நிகாய மற்றும் ராமபுர மகா நிகாய ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

பௌத்த சாசனத்தின் கௌரவத்தைப் பேணுவதும், மகா சங்கத்தினருக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டு வரும் மரியாதையைப் பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை மூத்த பௌத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளின் போது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும், பௌத்த துறவு பாரம்பரியங்களுக்கு இணங்கச் செயற்படுவதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்யக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பௌத்த பிங்குகள், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.

வெலிகம ஞானசார தேரரின் விடுதலையை அரசாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மகாநாயக்க தேரர்கள் எழுத்துமூலம் அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உலாபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
ships iran
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே 21 ஈரானிய கப்பல்கள் -இராஜதந்திர சமநிலையை பேணுவதற்கு சிரமப்படும் இலங்கை
harsha kumara
ஹோமாகம பொலிஸார் ஹர்சகுமாரவை கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் எங்கே ?வசந்த முதலிகே கேள்வி
sri-lanka-monk-meeting
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருவின் இரகசிய சந்திப்பு – ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
kassapa hotel
நான் ஐந்து நட்சத்திரஹோட்டலுக்கு சென்றது தவறான விடயமா? ஏன் சர்ச்சையை உருவாக்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
chemmani11111155555555555
செம்மணியில் பெருந்தொற்று அல்லது இயற்கை பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததாக 'ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை
gajendran
அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்
harsha kumara
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு
iran ships
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
monks pro2
ஞானசார தேரரின் விடுதலையை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் - பௌத்தமதகுருமார்