போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் ஹோமாகம பொலிஸ்; நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹர்ச குமாரா என்ற 29 வயது நபரே உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனா.
நாங்கள் அவரை பார்க்கசென்றவேளை அவர் தாக்கப்பட்டதை அறிந்தோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் நடக்க முடியாதநிலையில் இருந்தார் எனவும் குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் கூண்டிலிருந்து அவர் வந்தவேளை காயங்கள் வெளிப்படையாக தென்பட்டன குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் வற்புறுத்தியதை தொடர்ந்து பொலிஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு கொண்டு செல்வதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்த உறவினர்கள் பக்கச்சார்பற்ற விசாரணையும் நீதியும் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட சிறிதுநேரத்தின் பின்னர் நோய்வாய்ப்ட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.