இலங்கையின் கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதேவேளை அமெரிக்காவுடனான உறவுகளை சமநிலையில் பேணுவதற்கு இலங்கை தயாராகிவருகின்றது.
வெறுமையான கப்பல்கள் என குறிப்பிடப்படும் இந்த எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் எல்லைக்கு அருகில் தொடர்ந்தும் காணப்படுகின்றன ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எந்தவிதமான உதவிகளையே விநியோகங்களையோ வழங்குவதை தவிர்த்து வந்துள்ளது.
சனிக்கிழமை இ;ரண்டு கப்பல்கள் கடலசார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஊடாக இலங்கை கடற்படைக்கு அவசர அழைப்பை விடுத்தன.
இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் 40 மாலுமிகளையும் மீட்டு அவர்களிற்கு சிகிச்சை வழங்கிய பின்னர் ஈரானிற்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.
ஆம் இது சரியான தகவல் நாங்கள் 40 பேரை மீட்டு மருத்துவஉதவிகளை வழங்கிய பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைத்துள்ளோம் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்கா தடைவிதித்துள்ள ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை விநியோகங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது,இரண்டாம் நிலை தடைகள் குறித்த அமெரிக்காவின் எச்சரிக்கையை இலங்கை கருத்தில்கொண்டுள்ளது.
ஈரான் உட்பட அனைத்து நாடுகளுடனும் உறவை பேணும் அதேவேளை தேவையற்ற இராஜதந்திர கசப்புகளை தவிர்ப்பதற்கு கொழும்பு விரும்புகின்றது.