பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டபோதிலும் அதனை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 16 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் பொலிஸாருக்கான அதிகாரம் குறித்த கேள்விகளை மீண்டும் கிளறியுள்ளது.
நிறுத்துமாறு உத்தரவிட்டபோதிலும் அதனை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீதே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு சமூக ஊடக பதிவொன்றில் தெரிவித்துள்ளது.
குற்றங்களை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராகவும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் பொதுமக்கள் சட்டத்தினை மதிக்கவேண்டும் விதிமுறைகளுக்கு கட்டுப்படவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீங்கள் சட்டத்தை மதிக்கும் பிரஜையாகயிருக்கவேண்டும்,குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மகாகடே சந்தியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனங்களையும் தனிநபர்களையும் சோதனையிடும்போது அந்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டபோதிலும் அதனையும் மீறி பொலிஸாரை நோக்கி முச்சக்கரவண்டியை செலுத்திய நபர் பின்னர் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றுள்ளார் அவ்வேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 16 வயது இளைஞன் காயமடைந்துள்ளான் அந்த இளைஞனின் உயிருக்கு ஆபத்தில்லை உரிய சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததாலேயே 17 வயது இளைஞன் முச்சக்கரவண்டியை நிறுத்தவில்லை
பின்னர் அவன் சரணடைந்துள்ளான்,வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முச்சக்கரண வண்டியை மீட்டுள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்;.