தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்-புதிய தகவல்கள்

கண்டி – பல்லேகலையிலுள்ள தும்பற சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் 27 வயதுடைய விளக்கமறியல் கைதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோதே அந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பள்ளத்தென்ன தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (01) இரவு 8.00 மணியளவில், குறித்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோடுவதற்கு முயன்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தங்களுக்குச் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றும், வேறு நபர்கள் மூலமாகவே அவரது மரணம் பற்றித் தெரிந்துக் கொண்டதாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உறவினர்களின் கூற்றுப்படி, தகவல்களைப் பெறுவதற்காக அவர்கள் கெலகெதர பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலைக்குச் சென்றபோதிலும், என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும், உயிரிழந்தவரின் முகத்தைப் பார்ப்பதற்குத் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், அவரது மரணம் குறித்து மிகக் குறைந்த அளவிலான தகவல்களே தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த கைதி 3 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், அவரது எலும்புகள் முறிந்திருப்பதாகக் தகவல்கள் கேள்விப்பட்டதாகவும் உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

அவரது உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது என்றாலும், இச்சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறி உறவினர்கள் இந்த மரணத்திற்கு நீதி கோரியுள்ளனர்.

கண்டி – கெலகெதர பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், சுமார் 6 மாதங்களுக்கு முன்பே திருமணமானவர் என்றும், அவரது மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஏழு கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக வெளியான தகவல்களில், அவர் சுமார் ஒரு வார காலமாக விளக்கமறியலில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தையடுத்து அவரது சடலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gaje in batti
அமைச்சர் லால்காந்தவின் நேரடி நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் - கஜேந்திரன்
bribery commission
முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை: தகவல்கள் வெளியீடு
hamban
ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டசந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது
ISHARA1
பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் ஏற்படும்போது மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன
Investigation stamp rubber grunge
தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்
BIMAL1
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் - கரிசனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார்
court-judge-hammer-gavel-696x398
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு-உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள்
crime1
கொழும்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போன 24 வயது நபர்- நால்வர் கைதினை தொடர்ந்து மர்மம் விலகியது
CHEMMANY 16
இனவாத ஏச்சுப் பேச்சுகளின் இரைச்சல் எவ்வாறு இலங்கையின் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய விமர்சனப்பூர்வமான இணையவழி அறிக்கையிடலை அமைதியாக்குகிறது
Namal-Rajapaksa-2 (1)
சிறைச்சாலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பது யார், மேலும் உண்மை அவர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வது யார்?