ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டசந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக விற்பனைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 41 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து, எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி சந்தேகநபர்களுக்குக் குற்றப்பத்திரிகைகளை வழங்குமாறு ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 41 பேர் இவ்வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி கொடிகார மற்றும் பிரசன்ன ரணவீர, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 35 பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த பத்து வருடங்களாகப் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்குக் கொண்டுவந்து, மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்குக் குற்றப்பத்திரிகைகளை வழங்குவதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gaje in batti
அமைச்சர் லால்காந்தவின் நேரடி நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் - கஜேந்திரன்
bribery commission
முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை: தகவல்கள் வெளியீடு
d40bara-Prison-complex-300x193
தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்-புதிய தகவல்கள்
ISHARA1
பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் ஏற்படும்போது மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன
Investigation stamp rubber grunge
தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்
BIMAL1
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் - கரிசனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார்
court-judge-hammer-gavel-696x398
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு-உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள்
crime1
கொழும்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போன 24 வயது நபர்- நால்வர் கைதினை தொடர்ந்து மர்மம் விலகியது
CHEMMANY 16
இனவாத ஏச்சுப் பேச்சுகளின் இரைச்சல் எவ்வாறு இலங்கையின் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய விமர்சனப்பூர்வமான இணையவழி அறிக்கையிடலை அமைதியாக்குகிறது
Namal-Rajapaksa-2 (1)
சிறைச்சாலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பது யார், மேலும் உண்மை அவர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வது யார்?