முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை: தகவல்கள் வெளியீடு

முன்னாள்  அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடர்பான ஆவணங்களைப் பொலிஸ் சொத்து விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைத்துள்ளது 

பொலிஸ் விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 55 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

, கிட்டத்தட்ட 60 அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக முன்னாள்  அமைச்சர்கள் 16 பேர் மீதான விசாரணைகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பல அரசியல்வாதிகளும் அவர்களது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக்குவிப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டச் சீர்திருத்தங்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விரிவுபடுத்தப்பட்ட விசாரணை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விசாரணைகள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gaje in batti
அமைச்சர் லால்காந்தவின் நேரடி நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் - கஜேந்திரன்
hamban
ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டசந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது
d40bara-Prison-complex-300x193
தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்-புதிய தகவல்கள்
ISHARA1
பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் ஏற்படும்போது மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன
Investigation stamp rubber grunge
தும்பறைசிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்
BIMAL1
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் - கரிசனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார்
court-judge-hammer-gavel-696x398
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு-உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள்
crime1
கொழும்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போன 24 வயது நபர்- நால்வர் கைதினை தொடர்ந்து மர்மம் விலகியது
CHEMMANY 16
இனவாத ஏச்சுப் பேச்சுகளின் இரைச்சல் எவ்வாறு இலங்கையின் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய விமர்சனப்பூர்வமான இணையவழி அறிக்கையிடலை அமைதியாக்குகிறது
Namal-Rajapaksa-2 (1)
சிறைச்சாலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பது யார், மேலும் உண்மை அவர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வது யார்?