சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – அவையில் குழப்பநிலை

சபாநாயகர் ஜகத்விக்கிரமரட்ணவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உட்பட பல சிறப்புரிமை பிரச்சினைகளை உடனடியாக எழுப்புவதற்கு பிரதிசபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் மறுத்ததை தொடர்ந்து எதிர்கட்சியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதால் நாடாளுமன்றத்தில் குழப்பமான நிலை நிலவியது.

May be an image of text

எதிர்கட்சியினரின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த பிரதிசபாநாயகர் இன்று காலை 9 மணிக்கு பின்னரே பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சிறப்புரிமை பிரச்சினைகளின் பிரதிகள் தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.
அந்த சமர்ப்பிப்புகளை தான் உடனடியாக பரிசிலீக்காததால் உடனடியாக சிறப்புரிமை தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கு தான் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது குறித்து கரிசனை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச இந்த தீர்மானம் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஜனநாயக கொள்கைகளை மீறும் செயல் என குறிப்பிட்டார்.
எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது
எதிர்கட்சியினர் சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் அடங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர் என தெரிவித்த அவர் 44 எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த தீர்மானம் ஒக்டோபர் 12ம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் சேர்க்கப்பட்டது ஆனால் பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது இதனால் சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பு எதிர்கட்சியினருக்கு மறுக்கப்பட்;டது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தடுப்பது சபாநாயகரின் நடுநிலைமை நாடாளுமன்றத்தின் சுதந்திரம் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய கடும் கவலைகைளை எழுப்புகின்றது.
நாடாளுமன்றத்தின் பேச்சு கருத்து விவாதத்திற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன
சபாநாயகர் அரசியலமைப்பு ரீதியாக நடுநிலைமையாக செயற்பட கடமைப்பட்டவர் அரசாங்க மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நியாயமான உரிமைகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பினை வழங்கவேண்டும்,
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அனுமதி மறுத்தமை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயல் என சஜித்பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவரின் இந்த உரைக்கு பின்னர் எதிர்கட்சியினர் பிரதிசபாநாயகரின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டதால் அவையில் குழப்பமான நிலையேற்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

aacdb9d0-d70a-11f1-81b9-c76bd127a61a
டிரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். இந்த நாட்டின் நீதிக்காக நிற்போம்
Namal-750x422
கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்
buddha in jaffna
கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
Yoshitha-new
பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித
ravikaran ssssssssssssss
வனஇலாகா சட்டவிரோத காடழிப்புக்களை கட்டுப்படுத்த தவறுவதாகவும், அதிகாரிகள் தவறிழைப்பதாகவும் - ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; ஆராய்ந்துபார்த்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி பதில்
iran ships
ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் - அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை
BLACK JULY
1983 இனக்கலவரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளானது
image_2e32eaf276
வடக்கில் அரசாங்கத்தின் வசமுள்ள நிலங்கள் ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
CPA
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் - அரசியலமைப்பிற்கு முரணாண விடயங்களை கொண்டுள்ளதாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தில் மனு