கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல்ராஜபக்சவிற்கு வெளிநாட்டு பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
எனினும் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேறு வழக்குகளில் அவர் பிணை பெறாததால் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பார்.
கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ்வேர்க் சதுக்க காணியை பலநோக்கு அபிவிருத்தி திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்வது தொடர்பில் 100 மில்லியன் இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.