முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (POCB) ஆகியவற்றைத் திரும்பப் பெறவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று (04) நாடாளுமன்றத்தை நோக்கிப்பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனக அரகலய இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, ஜனநாயகத்தை மதிக்கும் தொழிற்சங்கங்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோரை இன்று நண்பகல் நாடாளுமன்றச் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் ஆரம்பத்தில் PSTB மசோதாவை நவம்பர் 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில்சட்டமூலங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மக்களின் பலமான எதிர்ப்பு காரணமாக அந்த முடிவை ஒத்திவைத்துள்ளதாகவும் முதலிகே தெரிவித்தார்.
பொதுமக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கும் முடிவை தங்கள் இயக்கம் வரவேற்பதாகக் கூறிய அவர், அதேநேரம் அரசாங்கம் PSTB மற்றும் POCB ஆகியசட்டமூலங்களை மசோதாக்களை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த முன்மொழியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்த முயல்வதாக முதலிகே குற்றம் சாட்டினார்…