கொழும்பு – நவம்பர் 5
இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படு;த்தும் புதிய சட்டமூலத்தை அதன் தற்போதைய வடிவத்தில் முன்னோக்கி கொண்டு செல்லவேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலத்தில் காணப்படும் பல சரத்துக்கள் சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளை மீறும் வகையிலும் ,தன்னிச்சையான தடுப்புகாவல்,சித்திரவதை மற்றும் நியாயமற்ற வழக்கு விசாரணைக்கான அபாயங்களை உருவாக்கும் வகையிலும் காணப்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒக்டோபர் 30 ம் திகதியிடப்பட்ட அறிக்கையில் ஐநாவின் ஐந்து மனித உரிமை நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற அல்லது அதனை விட அதிகாரங்களை வழங்ககூடும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகளையும் நீதித்துறை பாதுகாப்புகளையும் மதிக்கவேண்டும்.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த சட்டமூலத்தை ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கொடுமையானது என வர்ணித்து அதனை விலக்கிக்கொள்ளுமாறு கோரியுள்ளது.
உத்தேச சட்டமூலம் ஊடகவியலாளர்கள் மனித உரிமைபாதுகாவலர்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழு சட்டத்துறையினர் சிவில் சமூகத்தினர் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஆகியவர்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் இந்த சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும் தடுப்புக்காவல் அதிகாரங்கள்,நீதித்துறை மேற்பார்வை,ஊடக கட்டுப்பாடுகள், சித்திரவதைக்குஎதிரான விதிமுறைகள் குறித்து ஐநாவிற்கு தெளிவுபடுத்தவேண்டும் என மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
(ரி)