அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவி;ட்டது என நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சாடியுள்ள பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தனது மூன்றாவது வரவு செலவுதிட்டத்தில் என்ன வாக்குறுதிகளை வழங்குவார் என்பதை அறிவதற்காக மக்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவீன உயர்வு, அதிகரிக்கும் வரிகள்,எரிபொருள் விலை அதிகரிப்பு வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கு தவறியுள்ளமை போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கம் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன் அரசசேவையை டிஜிட்டல் மயமாக்குவோம் என தெரிவித்தது ஆனால் பொதுமக்கள் இன்றும் எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்றனர்.என்று நாமல் ராஜபக்ச ராஜபக்ச தெரிவித்தார்.
கப்பல்களிலிருந்து இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதையும் ராஜபக்ச கேள்விக்குட்படுத்தினார். முன்னதாக வரி நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசியப் பொருட்கள்இ வாகன இறக்குமதிகள் வங்கி வட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைச் சேவைகள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வீட்டு வருமானம் அதிகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய ‘டித்வா’ சூறாவளி குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்துக் குறிப்பிட்ட ராஜபக்சஇ பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருப்பதாகவும் சேதமடைந்த சாலைகளும் வீடுகளும் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்தியஇ சீன மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல முன்மொழியப்பட்ட திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுஇ வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குட்படுத்தினார்.
தேசிய பாதுகாப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ராஜபக்ச நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரியதுடன் மக்களின் தோற்றம் பச்சைக்குத்துதல் அல்லது உடைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களைக் குறிவைக்கச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
மேலும் பொலிஸாரை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியதுடன் பொலிஸ் துஷ்பிரயோகம் காவலில் நிகழும் மரணங்கள் மற்றும் வன்முறைப் பயன்பாடு தொடர்பான சம்பவங்கள் குறித்துப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
எவ்வித பலன்களையும் வழங்காமல் வெற்று வாக்குறுதிகளை வழங்குவதை விட்டுவிட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் பல வாக்குறுதிகள் எவ்வித நிறைவேற்றமும் இன்றி எப்படிக் கொடுக்கப்படப் போகின்றன என்பதை மதிப்பிடுவதற்காகவே ஜனாதிபதியின் மூன்றாவது சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்திற்காக தரப்பு காத்திருப்பதாக ராஜபக்ச தெரிவித்தார்.