பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரமுயல்கின்ற மூன்று சட்டங்களும் மிகமோசமானவை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்களே இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகின்ற அளவுக்கு அரசாங்கத்தின் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுநாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று போராட்டமொன்று நடைபெறுகின்றது
இது ஏதோ தமிழ் மக்கள் வந்து போராடுகின்ற ஒரு விஷயம் இல்லை.
தெற்கிலே இருக்கக்கூடிய சிவில் சமூகம்… தெற்கிலே இருக்கக்கூடிய அனைத்து சிவில் சமூகங்களும் ஒன்றுணைந்து…: இன்று போராடுகின்றன. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக நீங்கள் கொண்டுவரக்கூடிய மூன்று சட்டங்களும் மிகமோசமானவை.
இந்த சட்டங்களை எதிர்த்து.: சிங்கள மக்களே இன்றைக்கு வீதிக்கு இறங்கி போராடுகின்ற அளவுக்குத்தான் உங்களுடைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.