சிறுநீரக சத்திரகிசிச்சையின் பின்னர் உயிரிழந்த இரண்டு வயது சிறுவன் – சிறுநீரகங்கள் காணாமல்போனமை குறித்து சுகாதார அமைச்சு பதிலளிக்கவேண்டும்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2023ம் ஆண்டு சிறுநீரக சத்திரகிசிச்சையின் பின்னர் உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் சிறுநீரகங்கள் காணாமல்போனமை குறித்து சுகாதார அமைச்சு பதிலளிக்கவேண்டும் என கோரி சிறுவனின் குடும்பத்தவர்கள் கொழும்பில் சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹம்தி பஸ்லிம் என்ற சிறுவன் கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்தான்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்திரசிகிச்சையின் பின்னர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு இரகசியமாக சென்ற மருத்துவர் நவீன் விஜயக்கோனின் படத்துடனான பதாகைகளுடன்  காணப்பட்டதுடன் சுகாதார அமைச்சு வாக்குறுதியளி;த்த விசாரணை அறிக்கைகள் எங்கே என கேள்வி எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் பிள்ளைக்கு என்ன நடந்தது என சுகாதார அமைச்சு தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
பஸ்லிம் குழந்தையாகயிருந்தபோதே அவனது சிறுநீரக தொகுதியில் தொற்றுகாணப்பட்டதாகவும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் அவனது சிறுநீரகம் முற்றாக செயல் இழந்து 9 வீதமே இயங்குவது தெரியவந்ததாகவும் வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக காணப்பட்டதாகவும் இடது சிறுநீரகத்தை அகற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயகோன் டிசம்பர் 2022 24ம் திகதி சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்,அதன் பின்னர் அந்த சிறுவன் சிறுநீரகம் கழிக்க முடியாத நிலையேற்பட்டது, பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவனது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்தது.

குழந்தைக்குப் பிறவியிலேயே இரண்டு சிறுநீரகங்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் குறைபாடு (இருந்ததாகவும் ஒரு சிறுநீரகத்தை அகற்றியபோது அதனுடன் இணைந்திருந்த இரண்டாவது சிறுநீரகமும் சேர்ந்து வந்துவிட்டதாகவும் அப்போதைய வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் பெற்றோர் இந்த விளக்கத்தை நிராகரித்தனர். ஆரம்பகட்டப் பரிசோதனைகளில் வயிற்றுப் பகுதியில் இரண்டு சிறுநீரகங்களும் தனித்தனியாக அமைந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சத்திரசிகிச்சைக்காகவே குழந்தை நேரடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்

சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக 2023 ஜூலை 28 அன்று உயிரிழப்பதற்கு முன்னர் ஃபஸ்லிம் ஏழு மாதங்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தான்.

சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டமை பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அகற்றப்பட்ட அந்த உறுப்புகளை வைத்தியசாலை அதிகாரிகளால் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதும் நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் சத்திரசிகிச்சை இடம்பெற்று குறுகிய காலத்திலேயே வைத்தியர் விஜேகோன் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றமையும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

amalanayaki
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை – எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை
anura-Budget
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்
psta no12
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைசாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் -உயர் நீதிமன்றம்
ANojan-Sivarasa-family-AKD-1
நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்” : ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு  அனோஜனின் குடும்பத்தினர் நன்றி!
hamdi
மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்தான்- அவனது சிறுநீரகங்களை காணவில்லை- சுகாதார அமைச்சின் தொடர் மௌனம் பல சந்தேகங்களை எழுப்புகின்றது-
hamdi
மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்தான்- அவனது சிறுநீரகங்களை காணவில்லை- சுகாதார அமைச்சின் தொடர் மரணம் பல சந்தேகங்களை எழுப்புகின்றது-
Welikada-prison
விளக்கமறியலில் இருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு
monks fight
அனுராதபுரத்தில் பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் மோதல்: 
WhatsApp Image 2026-11-12 at 12.10
1993 நவம்பர் 12ம் திகதி – யாழ் செயலகம் மீது விமானக்குண்டு வீச்சு அரசாங்க அதிபர் உட்பட 26 பேர் காயம்- காவல்துறை உறுப்பினர் பலி
bribery commission
முன்னாள் மேயர், நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) பணிப்பாளர் மற்றும் ஒரு மாத ஐரோப்பியச் சுற்றுலா: நீர்கொழும்பு இலஞ்ச ஊழல் சர்ச்சை