பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைசாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் -உயர் நீதிமன்றம்

குழுநிலையில் நான்கு திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசமைப்பின் 121(1)ம் உறுப்புரையின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பான தீர்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி இச்சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு குழு நிலையில் நான்கு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்இ பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் மூன்று திருத்தங்களை மேற்கொள்வதற்கு சொலிசிட்டர் ஜெனரல் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரிவு26 (2) திருத்தம்-24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு பொலிஸ் காவலில் தடுத்துவைப்பதற்கு நீதவான் ஒருவர் அனுமதி வழங்குவதற்கு முன்னர் விசாரணையை நடத்தும அதிகாரி விண்ணப்பமொன்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

பிரிவு 59(5)(டி)திருத்தம்- பயனுள்ள நீதித்துறை மேற்பார்வையை உறுதிசெய்வதற்காக பிரிவுபிரிவு 59(5)(டி)  இல் குறிப்பிடப்பட்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் என்பதற்கு பதிலாக உயர்நீதிமன்றம் என மாற்றப்படவேண்டும்.
பிரிவு 60(7) நீக்கம்:-பிரிவு 60(7
தேவையற்றது என்ற வகையில் அதனை சட்டமூலத்திலிருந்து நீக்குமாறு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரிவு 66(1) மீள்வரைவு:
இச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் அல்லது வழங்கப்படும் எந்தவொரு நிறைவேற்று உத்தரவு பணிப்புரை அல்லது வழிகாட்டலையும் அரசியலமைப்பின் 126 140 அல்லது 141 ஆகிய உறுப்புரைகளின் கீழான சட்ட நடவடிக்கைகளின் ஊடாகச் சவாலுக்கு உட்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிவு 66(1) மீள்வரைவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Namal-Rajapaksa-2 (1)
நாமல் ராஜபக்சவின் பிணையை இரத்து செய்யக் கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மனு
ulapana
 டில்வினின் ஹெல்மெட் படை குறித்து மகாநாயக்க தேரர்கள் மௌனம் காக்கிறார்கள் - உலப்பனே தேரர்
HARINI JULY
வரவுசெலவுதிட்ட விவாதத்தின் மீதான எதிர்கட்சியின் பதிலுரையை ஹர்ச ஆரம்பிக்காதது ஏன்? ஹரிணி கேள்வி
Sajith-Premadasa-4
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை முத்தமிடுவதை விட காவன்திஸ்ஸ யானையை முத்தமிட்டது மிகவும் பெறுமதியானது- சஜித் தெரிவிப்பு
ceylon chamber of commerce
பொருளாதார மாற்றத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வரவு செலவுதிட்டம் - இலங்கை வர்த்தக சம்மேளனம்
Kassapa-Thera
மருத்துவமனையில் பொலிஸாரை மிரட்டும் கஸ்ஸப்ப தேரர் – வெளியானது வீடியோ
image_cd3a63ae85
1993- நவம்பர் 13 – புனித யாகப்பர் தேவாலயத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் விமானம் தாக்குதல் -
FARMER
மானியங்கள் வழங்கப்படாதது குறித்து விவசாயிகள், மீனவர்கள் கேள்வி
anura-Budget
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தைத் தவிர்த்த வரவு செலவுத் திட்டம்; போரால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்ற உறுதி
no psta156
பாதுகாப்பு - இக்கட்டான ஜனநாயக நிலை: உரையாடல் ஒரு தீர்வைத் தரக்கூடும்