நீண்டகால பாரம்பரியத்தின் அடிப்படையில் வரவு செலவுதிட்ட விவாதத்தின் மீதான எதிர்கட்சியின் ஆரம்ப பதிலுரையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா ஏன் நிகழ்த்தவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பினார்
பிரதமர் தனது நாடாளுமன்ற உரையில் மேலும் தெரிவித்ததாவது
2020 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவானது முதல் வரவுசெலவுதிட்டத்திற்கான எதிர்கட்சியின் பதிலுரையை ஹர்ச டி சில்வாவே ஆரம்பித்து வைப்பதை நான் அவதானித்துள்ளேன்.
வழக்கமாக அவரே எதிர்கட்சியின் உரையை ஆரம்பித்து வைப்பார் 2020 இல் நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவானது முதல் இதுவே நடைமுறையாக காணப்பட்டது.
அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராகயிருப்போம், நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் சரி ஆளும்கட்சியில் இருந்தாலும் சரி அவரது ஆரம்ப உரையை கேட்க தயாராகயிருப்போம் இன்று ஒரு மாற்றத்தை காண்கின்றோம்.
2027 வரவு செலவு திட்டம் குறித்த ஹர்ச டிசில்வாவின் கருத்தை கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது கட்சி முந்தைய நிலைப்பாட்டை பேணுகின்றதா என்பதை அறிய ஹர்ச டிசில்வாவின் உரை உதவும்.
பொருளாதாரம் சர்வதேச நாணயநிதியம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் தவறான தகவல்களை முன்வைத்துள்ளார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.