மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீளவும் தமிழீழத்தைக் கோருவோம்-ரவிகரன்

மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மத்திய அரசிற்குள் உள்ளீப்பதனூடாக இந்த அரசாங்கமும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலை முன்னெடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசாமாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீளவும் தமிழீழத்தைக் கோருவோம், அதனைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குள் உள்ளீர்த்து மாகாண நிருவாக அலகுகளையும் அதிகாரங்களையும் பலவீனப்படுத்துவதன் ஊடாக மாகாணக் கட்டுமானம் என்ற ஒன்று தேவையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிடலாம் என்பது, மறுதலையாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதையே மீள வலியுறுத்தி நிற்கும் என்பதை இவ்வரசாங்கம் உணரவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 14.11.2026இன்று 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இணைந்த வடகிழக்கு நிருவாக அலகு வடக்கு, கிழக்காகப் பிரிந்தமை, எட்டு ஆண்டு காலமாக மாகாண சபை நடாத்தப்படாமல் மக்கள் சார்பாண்மை இன்றி மத்திய அரசின் ஏவல்களில் மாகாண நிருவாக அலகுகளை கொண்டு நடாத்துகின்றமை, அவற்றினால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தி நிலையை சாதகமாக்கி மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மெல்ல மெல்ல நலிவாக்கி மத்திய அரசிற்குள் உள்ளீர்க்கின்றமை என இத்தீவில் இவ்வரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலுக்கு எனது வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குள் உள்ளீர்த்து மாகாண நிருவாக அலகுகளையும் அதிகாரங்களையும் பலவீனப்படுத்துவதன் ஊடாக இறுதியில் மாகாணக் கட்டுமானம் என்ற ஒன்று தேவையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிடலாம் என்பது, மறுதலையாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதையே மீள வலியுறுத்தி நிற்கும் என்பதை இவ்வரசாங்கம் உணரவேண்டும்.
எனவே, அபிவிருத்தியின் போர்வையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுக்கும் நுண்ணரசியலை புறந்தள்ளி, வடகிழக்கில் அபிவிருத்தியோடு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் இனப்பிரச்சினைக்கும் உரிய தீர்வை வழங்குவதில் இதயசுத்தியுடன் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
நிருவாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஆளணி வளத்தை சீராக்குவதற்கும், மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய வள நிரப்பலை மேற்கொள்வதற்கும், உள்ளக பயிற்சி மருத்துவர்களை உட்சேர்ப்பதற்கும், மாவட்ட மக்களுக்கான பெரும்பாலான மருத்துவ சேவை வழங்கலை மாவட்ட மருத்துவமனைக் கட்டமைப்புக்குள்ளேயே வழங்குவதற்கும்
உரிய தீர்வென்பது
மருத்துவமனையை மாகாணத்தில் இருந்து மத்திக்கு மாற்றுவது தான் என்றால் மாகாணத்தில் இருந்து மத்திக்கு நீங்கள் உள்ளீர்த்த அத்தனை தேசிய பாடசாலைகளிலும் இப்போது தேனாறும் பாலாறுமா ஓடுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
இனவாதத்தின் உச்சத்தைத் தொட்ட தொடரும் பசுக் கொலைகள்! தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை முறித்துவிட்டு அபிவிருத்தி பேசும் அநுர அரசாங்கம்!
rauff hakeem
இஸ்ரேலிய ட்ரோன் கொள்முதல்: “அமெரிக்காவுக்காக உளவு பார்க்கவா?” என ஹக்கீம் கேள்வி
ali sab
தனது தாயாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்சவினால் அது பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது – அலி சப்ரி
karu11
வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு வாக்குறுதியாகும்; அதன் பெறுமதி அது நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலமே அளவிடப்படுகிறது
mattala mass grave
இலங்கையின் மூன்றாவது பெரிய மனிதப் புதைகுழி வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து மேல் நீதிமன்றம் பரிசீலனை
kassapa121
கஸ்ஸப்ப தேரரின் கம்பை சுழற்றும் போராட்டம்- ஜனாதிபதி தெரிவித்திருப்பது என்ன?
906583001_1463221058520684_5073082719166848707_n
வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதக் குழுக்களில் மக்கள் இணைவதைத் தடுக்கும் புதிய சட்டத்தை நோக்கி இலங்கை -
anura gg
எதிர்க்கட்சிகள் திடீரென ஒன்றிணைய முயற்சிப்பது ஏன்? ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்
Namal-Rajapaksa-2 (1)
நாமல் ராஜபக்சவின் பிணையை இரத்து செய்யக் கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மனு
ulapana
 டில்வினின் ஹெல்மெட் படை குறித்து மகாநாயக்க தேரர்கள் மௌனம் காக்கிறார்கள் - உலப்பனே தேரர்