நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சை நாடும் கைதிகளின் உறவினர்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள், தமக்கு நீதி கோரி நாளை (நவம்பர் 18) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றிற்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாக ‘சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு’ (CPRP) அறிவித்துள்ளது.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேராவின் கையொப்பத்துடன் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள், தமது குறைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அரசாங்கத்திடமும் முன்வைத்து நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு மாத்திரம் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வு விசாரணைகள் ஒருதலைப்பட்சமாகவும் அநீதியான முறையிலும் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட உறவினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தமது முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்துகொள்வதற்காக நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு நீதி அமைச்சிற்குச் சென்று நீதி அமைச்சரைச் சந்தித்து தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் குறித்து விடயங்களை முன்வைக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ
TRUMP ZI PUTIN
சீனாவில் டிரம்ப் புடின் சந்திப்பு
carney no
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி
court-judge-hammer-gavel-696x398
கிரிஷ் வழக்கு – நாமலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை
shashi11
சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
gnasaraa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் சிறைத்தண்டனை உறுதி -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
gajendran
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.-கஜேந்திரன்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு; நாளை குற்றப்பத்திரிகை கையளிப்பு