பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் -ஜனாதிபதிக்கு சட்டவல்லுநர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் கடிதம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTB) மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ (POC) ஆகிய இரண்டையும் உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கோரி, நாட்டின் முக்கிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

Image

 

நவம்பர் 19 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், கடந்த நவம்பர் 9 ஆம் திகதி ‘அனைவருக்கும் நீதி’ (Justice For All) அமைப்பினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதற்கமைய, நவம்பர் 16 ஆம் திகதி இச்சட்டமூலங்கள் தொடர்பில் விசேட கூட்டமொன்று நடைபெற்றதாகவும், அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இக்கடிதம் எழுதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டமூலங்கள் தொடர்பில் மனித உரிமைகள் சமூகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்றுள்ள கையொப்பமிட்டவர்கள், அந்த அடிப்படையிலேயே இவ்விரு சட்டமூலங்களையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

Image

இவ்விரு சட்டமூலங்களிலும் இலங்கையின் மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதகமான சரத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குமாறு தாம் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருவதை நினைவுகூர்ந்துள்ள அவர்கள், புதிய சட்டமூலங்கள் இரண்டிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களைத் தொடர்ந்தும் தக்கவைக்கக் கூடிய கொடூரமான சரத்துக்கள் காணப்படுவதாகவும், ஜனநாயக நாடொன்றில் இத்தகைய சட்டங்களுக்கு இடமில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சட்ட சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்தாலோசிக்க ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாகவும், வெளிப்படையான மற்றும் திறந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான தமது கரிசனைகளை நேரடியாக எடுத்துரைப்பதற்கு ஜனாதிபதியுடன் விரைவில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

May be an image of one or more people, people studying and text

May be an image of one or more people, dais and text

May be an image of one or more people, people smiling and text

இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளோர் விவரம்: ஸ்ரீ லங்காபிமான்ய கரு ஜயசூரிய பேராசிரியர் சாவித்திரி குணசேகர கலாநிதி தினேஷா சமரரத்ன சந்திரா ஜயரத்ன ஜெகான் பெரேரா ரோஹன ஹெட்டியாராச்சி லக்ஷான் டயஸ் எம். அமிதா பிரியந்தி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கலாநிதி கெஹான் குணதிலக்க சந்துன் துடுகல மகேஷி ஹேரத் ஜீவரத்தினம் சுரேஷ் சம்பத் சமரக்கோன் செல்வராஜா ராஜசேகர் மஞ்சுள கஜநாயக்க நபீலா இக்பால் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன (ஜனாதிபதி சட்டத்தரணி) எரான் விக்கிரமரத்ன எம். ஏ. சுமந்திரன் (ஜனாதிபதி சட்டத்தரணி) சாலிய பீரிஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி) ஏ. எம். பாயிஸ் சாணக்கியன் இராசமாணிக்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) பவானி பொன்சேகா எர்மிசா டெகல் நதீஷானி பெரேரா ஜெருஷா குரோசெட் – தம்பையா பெனிஸ்லோஸ் துஷான்

May be an image of one or more people and text

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

images (26)
ஜனாதிபதி அனுர குமாரவை தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கின்றோம் – பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன்!
police111
சுன்னாக பொலிஸாரின் அச்சுறுத்தம் செயற்பாடு- விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகம் பணிப்புரை
cid
செம்மணியை அடையாளம் காட்டும் நிலையில் சோமரத்ன இல்லையாம்!நீதிமன்றத்தில் சி.ஐ.டி. தெரிவிப்பு
ratnavel
செம்மணியில் மீட்கப்பட்ட இராணுவ உபகரணம் தொடர்பில் சோமதேவ மௌனித்தமை ஏன்? – சட்டத்தரணி ரட்ணவேல் கேள்வி
iMRANKHAN-GETTY-1
பாக்கிஸ்தானுடனான உறவுகள் குறித்து கரிசனை- இம்ரான்கான் விடுதலைப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிராகரிப்பு
nandalal
இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க
court-judge-hammer-gavel-696x398
சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்குத் தடை-பொலீசாரின் வழக்குதள்ளுபடி
FB_IMG_1795110396606-768x795
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
bimal
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைத் தொழில்முறை மற்றும் கண்ணியமான முறையில் நிறைவு செய்த ஒரே அரசாங்கம் NPP அரசாங்கமே – பிமல் ரத்நாயக்க
police cell
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயது நபர் பொலிஸ் காவலில் திடீர் சுகவீனமுற்று மரணம்