சுன்னாக பொலிஸ் பிரிவில் அதீத ஒலி எழுப்பிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் முறை பாட்டை வழங்கியவருக்கு அதே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உத்தியோத்தர் அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் அலுவலகம் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரை உடன் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிபுரை விடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது தனது வசிப்பிடத்திற்கு அருகில் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாகவும், இது தனது வயதான தாயாரின் ஆரோக்கியம் மற்றும் பிள்ளையின் கல்வி செயற்பாடு பாதிக்கப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
17.10.2026 அன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர், அடையாளம் தெரியாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தொலைபேசி எண்ணிலிருந்து தம்மைத் தொடர்பு கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும்,
இதனால் தனது மற்றும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி பிரதமர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கோரிக்கை விடுத்தவருக்கு தாமதமின்றி அறிவிக்குமாறும், மேலே உள்ள குறிப்பு எண்ணின் கீழ் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அலுவலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளது.