பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விசாரணை: இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட ஆறு அடிப்படை உரிமை (FR) மனுக்களை இலங்கை உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்துள்ளதாக சந்தியா பிரியங்கனி எக்னெலிகொட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் 402ஆம் இலக்க நீதிமன்ற அறையில், 2026 நவம்பர் 27ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனுக்களின் பின்னணி

எக்னெலிகொட கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் போது, 2015ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளினால் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

விசாரணையின் போது தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் தமது மனுக்களில் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன், அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்டோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டிருந்தனர்.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு இலக்கங்கள் வருமாறு:

  • SCFR 365/2015

  • SCFR 366/2015

  • SCFR 367/2015

  • SCFR 368/2015

  • SCFR 200/2016

  • SCFR 203/2016

இடையீடும் சட்டப் பிரதிநிதித்துவமும்

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் இவ்வழக்கு நடவடிக்கைகளில் இடையீடு செய்வதற்கு சந்தியா எக்னெலிகொட அனுமதி கோரியிருந்த நிலையில், நான்கு வழக்குகளில் எட்டாவது பிரதிவாதியாகவும், ஏனைய இரண்டு வழக்குகளில் ஒன்பதாவது பிரதிவாதியாகவும் முன்னிலையாகிச் சமர்ப்பணங்களை முன்வைக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த காலங்களில் தமக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் குழாமிற்கு — ஆரம்பத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கிருஷாந்த வெலியமுன மற்றும் அவரது சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகளுக்கும், அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமன்ன மற்றும் அவரது கனிஷ்ட சட்டத்தரணிகள் குழாமிற்கும் — எக்னெலிகொட தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

“நீதியை நோக்கிய பயணத்தில் சட்டத்திற்காகக் குரல் கொடுப்பது வெறுமனே ஒரு தொழில்சார் கடமை மட்டுமல்ல; சில வேளைகளில் அது உண்மைக்காகவும் நீதிக்காகவும் சுமக்கப்படும் ஒரு சமூகப் பொறுப்புமாகும்,” எனக் குறிப்பிட்ட எக்னெலிகொட, தமது சட்டப் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பு, சட்ட அறிவு மற்றும் ஆதரவிற்கு நன்றி பாராட்டியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

mullivakal
போர்க்குற்றச் சாட்டுக்கு உள்ளான தளபதியிடம் இருந்து 'நல்லிணக்கம்' குறித்த போதனை!
Aananda-Wijepala-2024.11
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்  புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியமை --மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கைதுகள்
faizer
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்பதற்கான வரைவிலக்கணம்என்ன? பைசர் முஸ்தபா 
cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது