இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்துவெளியிட்டுள்ளார்
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் கண்டிக்கு விஜயம் செய்து அங்கு கட்டப்படும் ஏழு நட்சத்திர விடுதியை பார்வையிட்டார்.
கண்டி ஹோட்டலில் சர்வதேச அளவில் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் காணப்படும் தரமும் வசதிகளும் காணப்படுவதாக தெரிவித்த அவர் நான் இந்த ஹோட்டலை பார்வையிடவந்தேன் இந்த ஹோட்டல் எதிர்வரும் மேமாதமளவில் செயற்பட தொடங்கும் சுகாதாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களும் உள்ளன,கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டர் சேவை உள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பனியை தவிர அனைத்தும் உள்ளது என தெரிவித்துள்ள அவர் அனைத்து காலநிலையும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.