ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுதிட்டத்தினை மக்களிற்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் எதனையும் வழங்காத வரவு செலவுதிட்டம் என வர்ணித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கம் மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உயர் அதிகாரி இந்த வரவுசெலவுதிட்டத்தை உருவாக்கியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள மக்களை கைவிட்டுவிட்டது,என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இது இரட்டை நாக்கு அரசாங்கம்,ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒன்றை தெரிவித்தார்கள் தற்போது வேறொன்றை தெரிவிக்கின்றார்கள், இந்த அரசாங்கத்தினால் மக்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்