செல்லப்பிராணிகள் கட்டாக்காலி நாய்கள் போன்றவற்றை அடக்கம் செய்வதற்கு செல்லப்பிராணிகளின் கல்லறைகள் அவற்றை தகனம் செய்வதற்கான இடங்கள் போன்றவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வரவு செலவுதிட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளை மரியாதையான சுற்றுச்சூழல் அடிப்படையில் பொறுப்புணர்வுவாய்ந்த தகனம் மற்றும் அடக்கம் ஆகியவற்றிற்கான தேவைகள் மக்கள் மத்தியில் அதிகரித்துவருவதை காணக்கூடியதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கெஸ்பாவ பிலியந்தலையில் இதற்கான ஆரம்ப கட்ட திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி 2026 வரவுசெலவுதிட்டத்திலிருந்து இதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
