இந்தியா இலங்கை குறித்து எந்த சந்தேகங்களையும் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை – இலங்கை தொடர்ந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் உதவி அவசியம் – இந்திய ஊடகத்திற்கு சஜித்

இந்தியாவின் என்டிடிவியுடனான பேட்டியில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய இலங்கை உறவுகளின் எதிர்காலம்,இந்தோபசுபிக்கில் சீனாவின் எழுச்சி,இலங்கையின் பலவீனமான நிதிநிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2028 இல் கடன்மீள் செலுத்துதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்ளும் நீண்டகால ஸ்திரதன்மையை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் உதவி இலங்கைக்கு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார மீட்சிக்கு மாத்திரமல்லாமல் இலங்கை நிலைபேண்தகு பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவுகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை குறித்து எந்த சந்தேகத்தையும் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை,நாங்கள் உங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்,இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விசேட உறவுகள் உள்ளதாக நான் தெரிவிப்பேன்,இந்த உறவுகள் அமெரிக்காவின் ஜனாதிபதி ரீகன் காலத்தில் பிரிட்டனின் பிரதமர் தாச்சர் அரசாங்கத்துடன் காணப்பட்ட உறவுகள் போன்றது இது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உறவுகள் விசேடமானவை மிக முக்கியமானவை பகிரப்பட்டவரலாறு கலாச்சாரம்,பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றில் வேருன்றியவை என தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்கட்சி தலைவர் இரண்டு நாடுகளினதும் எதிர்காலங்கள் பிரிக்க தவிர்க்கமுடியாதபடி பிணைந்துள்ளன,இந்தியாவின் 1.4 பில்லியன் சந்தையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை பெரும் பயனை அடையலாம் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் முன்னேற்றகரமானதாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சஜித்பிரேமதாச எதிர்கால உடன்படிக்ககைள் பரஸ்பரம் பலனை வழங்குபவையாகவும் இரண்டுநாடுகளின் போட்டித்தன்மை சாதகதன்மையை வலுப்படுத்துபவையாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அனுகூலம் எனும்போது அது பரஸ்பர அனுகூலமாகயிருக்கவேண்டும்,ஆனால் இருநாடுகளிற்கும் இடையில் விசேட உறவுகள் உள்ளதால் பொதுவான புரிந்துணர்வு உள்ளதால் நாங்கள் பொதுவான அணுகுமுறையையும் நாங்கள் இணைந்து கட்டியெழுப்பகூடிய கட்டமைப்பையும் கொண்டிருக்க முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நவீன புவிசார் அரசியல் மனித குலத்திற்கு சாதகமான விடயங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கவேண்டும் போருக்கு பதில் சமாதானத்தை என தெரிவித்துள்ள அவர் இலங்கை பிராந்தியத்தில் அனுசரணையாளர் அமைதியை ஏற்படுத்துபவர் என்ற பங்கை வகிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்