சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் வரையறைகளுக்குள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசாங்கத்தை பாராட்டவேண்டும், அனுர அரசியல் நன்மைகளை விட நாட்டின் எதிர்காலத்தை மதிக்கின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்- அலி சப்ரி

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் வரையறைகளுக்குள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசாங்கத்தை பாராட்டவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அரசியல் நன்மைகளை விட நாட்டின் எதிர்காலத்தை மதிக்கின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் வரையறைகளுக்குள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசாங்கத்தை பாராட்டவேண்டும்.
பொருளாதார மீட்சி என்பது தற்செயலாக இடம்பெறாது அது ஒரு விபத்தல்ல,அது ஒரு தற்செயலான பரிசு அல்ல,ஒரு தலைவரின் கவர்ச்சியின் விளைவாக சாத்தியமாகாது.
காலப்போக்கில் நிலைத்தன்மை தியாகம் மற்றும் தைரியத்தின் மூலம் பொருளாதார மீட்சி சாத்தியமாக்கப்படுகின்றது.

2022 இல் இலங்கை சர்வதேசநாணயநிதியத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவேளை நாடு வீழ்ச்சியடையும் நிலையிலிருந்தது.

நாங்கள் முன்னெடுக்கவேண்டிய திட்டங்கள் மிகவும் சவாலானவையாகவும் ஈவிரக்கமற்றவையாகவும் காணப்பட்டன.
2029க்குள் பொதுகடனை 119 வீதத்திலிருந்து 95 வீதமாக குறைக்கவேண்டும்.
2023 -24க்குள் இலங்கை பல இலக்குகளை எட்டியது,மந்திரத்தால் அல்ல,வெறுமனே அரசியல் துணிச்சலால்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் அந்த சுமையை சுமந்தது,
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி சிலர் எடுக்க துணியாத தீர்மானங்களை அவர் எடுத்தார்.அந்த தீர்மானங்கள் அவர் அவரது ஜனாதிபதி பதவியை இழக்கும் நிலையை ஏற்படுத்தினாலும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றியது.

நேற்று ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுதிட்டம்,சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்குள் பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட அதேபாதையின் தொடர்ச்சியே.

தலைமைத்துவம் என்பது,அரசியல் போட்டிக்கு அப்பால் என்ன நிலைத்திருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டு செயற்படும் ஆற்றலை அடிப்படையாக வைத்தும் கணிப்பிடப்படுகின்றது.
இந்த விடயத்தில்தான் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாராட்டுக்குரியவர்.
அவரது இயக்கம் முன்னர் கடுமையாக எதிர்த்த இந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது,சாதாரணமான விடயமல்ல,மிகவும் துணிச்சலான விடயம்.

சித்தாந்தத்தை கைவிட்டு நடைமுறைவாதத்தை தழுவுவதற்கு மிகுந்த தைரியமும்,முரண்பாடான தன்மையும் தேவை.
கடுமையான எதிர்ப்பிலிருந்து நிதிமரபுவழிக்கு மாறுவது வரிவிதிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து அதனை பாதுகாப்பது என்பது அரசியலில் பெரும்பாலும் காணப்படாத ஒரு மாற்றமாகும்.இந்த மாற்றத்தை பாராட்டவேண்டும்.அதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய பாராட்டை பெறவேண்டும்.
மக்களை கவரும் போக்கை விட நடைமுறைவாதத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அரசியல் நன்மைகளை விட நாட்டின் எதிர்காலத்தை மதிக்கின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் உள்ள போதிலும் தொடர்ந்தும் முன்னைய அரசாங்கத்தின் பாதையில் பயணிப்பதும்,நிதி ஒழுக்கத்தை பேணவும்,அரசதுறை நிறுவனங்களை சீர்திருத்தவும்,அவரது அரசாங்கம் தீர்மானித்திருப்பதை பாராட்டவேண்டும்.

இலங்கையின் இன்றைய முன்னேற்றம் அதிசயத்தினால் நிகழவில்லை, தொடர்ச்சியினாலேயே சாத்தியமாகின்றது.

உண்மைக்கான எங்களின் ஆகக்குறைந்த கடப்பாடு என்னவென்றால் உண்மையை உள்ளவாறே தெரிவிப்பது,கைதட்டலிற்காக வரலாற்றை மாற்றி எழுதாமல் இருப்பது.

அதிகரிக்கும் வரிவருமானம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை,வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியன ஒரு அல்லது மற்றுமொரு அரசாங்கத்தின் தனிப்பட்ட வெற்றிகள் அல்ல.அவை அரசியலால் பிரிக்கப்பட்ட ஆனால் அவசியத்தால் ஒன்றுபட்ட இரண்டு நிர்வாகங்களின் தொடர்ச்சியின் ஒட்டுமொத்த விளைவாகும்

எனவே எல்லா வகையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டாடுவோம் ஆனால் அடுத்தவர் மீட்சியை ருசிக்க யார் கசப்பான மாத்திரையை விழுங்கினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் மறந்துவிட்டாலும் எண்கள் நினைவில் கொள்கின்றன.

முன்னேற்றத்திற்கு எந்த சித்தாந்தமும் இல்லை என்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் காலத்தால் அழியாத உண்மையை இலங்கை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொண்டிருக்கிறது. அது சரியானதைச் செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே வெகுமதி அளிக்கிறது அது அவர்களின் கைதட்டலைப் பெற்றாலும் இல்லாவிட்டாலும்

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்