பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் வேலையில் அன்றாடம் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என கூறிவிட்டன. ஊழியர்கள் கோடிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஏஐ கருவிகளை தான் பயன்படுத்த வேண்டும் எந்தெந்த ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்து மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என சுந்தர் பிச்சை அனைத்து கூகுள் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ஊழியர்கள் ஏஐ கருவிகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர் , ஆனால் தற்போது அது கட்டாயம் என்ற நிலைக்கு வந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இக்னைட் டெக் என்ற அமெரிக்க நிறுவனம் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கான வேலையில் 20% -ஐ ஏஐ சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்காக ஒதுக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. மேலும் ஏஐ கருவிகளை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் இல்லையா என்பதையும் கண்காணிக்க தொடங்கி விட்டதா.
இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற டெக் நிறுவனங்கள் கூட ஊழியர்களுக்கு ஏஐ சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றன. அமெரிக்காவின் பிடபிள்யூசி, மெக்கன்சி போன்ற நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு வரக்கூடிய ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கின்றன. மேலும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதிலேயே ஏஐ திறன் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய தொடங்கியிருக்கின்றன .

லிங்குடின் வெளியிட்ட ஆய்வு தகவலில் வேலை வாய்ப்புக்காக வரக்கூடிய பதிவுகளில் ஏஐ அறிவு தேவை என்ற டிமாண்ட் 70% உயர்ந்துள்ளதாக கூறுகிறது. நிறுவனங்களை பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றி வருகின்றன. தங்களின் ஊழியர்களும் அதற்கேற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தற்போதைய இந்த போட்டி உலகில் நிலை நீடித்து நிற்க முடியாது என கருதுகின்றன . எனவே வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் புதிய ஏஐ அப்டேட்டுகளை பெற்று அதற்கேற்ப செயல்பட்டால் தான் வேலைவாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உண்டாகி இருக்கிறது