சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து
நடுத்தர மக்களை கண்ணீர் வடிக்க செய்திருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் உயர தொடங்கியது.
திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் திடீரென குறைந்தது. இந்த தங்கம் விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 11600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 11800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .
ஒரு சவரன் தங்கம் 1600 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று 92800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 94400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இப்படி தடாலடியாக விலை உயர்ந்திருப்பது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது . திங்கட்கிழமை ஆன 10ஆம் தேதி அன்று சென்னையில்ஒரு கிராம் ஆபரண தங்கம் 11480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அது இன்று 11800 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது அதாவது இந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. ஒரு சவரனுக்கு 2இ560 ரூபாய் உயர்ந்துள்ளது.
24 கேரட் தங்கமும் இன்றைய தினம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 12656 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 217 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 12873 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1736 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 101248 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 102984 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
18 கேரட் தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 9850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1480 ரூபாய் விலை உயர்ந்து 78800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
