இலங்கையில் பெண்சுற்றுலாப்பயணியொருவர் நபர் ஒருவர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலிற்கு உள்ளாவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தி செல்லும் பெண் சுற்றுலாப்பயணி முச்சக்கரவண்டியை நிறுத்தியவேளை நபர் ஒருவரை எதிர்கொள்வதையும் அவ்வேளை அந்த நபர் அநாகரீகமான விதத்தில் நடந்துகொள்வதையும் வீடியோ காண்பித்துள்ளது.
பெண் சுற்றுலாப்பயணி இது குறித்து அதிர்ச்சியும் அச்சமும் வெளியிடுகின்றார்.
இலங்கை அன்பான மக்கள் காணப்படும் அழகான நாடு,ஆனால் திடீர் என இது நடந்துள்ளது, இனி இலங்கையில் இருக்கும் எஞ்சிய நாட்கள் முழுவதும் நான் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அச்சத்துடன் இருக்கப்போகின்றேன் என தெரிவித்துள்ளார்.