சீனா தனது பிரஜைகளை ஜப்பானிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
தாய்வான் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்தே சீனா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
தாய்வான் தொடர்பில் இந்த வாரம் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கடும் வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்றன.
தாய்வான் மீது சீனா தாக்குதலை மேற்கொண்டால் ஜப்பான் தனது தற்பாதுகாப்பிற்காக தாக்குதலை மேற்கொள்ளலாம் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி தெரிவித்ததை தொடர்ந்து சர்ச்சை மூண்டது.
சீனா இந்த கருத்து தொடர்பில் ஜப்பான் தூதுவரை அழைத்து விளக்கம் கோரியுள்ளது.
இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுகளும் பரஸ்பரம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
சீன தூதுவர் தெரிவித்துள்ள கருத்து ஜப்பான் பிரதமரின் தலையை துண்டிப்பது என்ற பொருள்பட அமைந்துள்ளது.இந்தப் பூசல் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்றுப் பகைமையையும் சுயராஜ்ய தைவானின் இறையாண்மை குறித்த நீண்டகால “மூலோபாய தெளிவின்மையையும்” தொடுகிறது