சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது சிறிதளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைப்பின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மூலமான மாதாந்த வருமானம் ஜூலை ஆகஸ்;ட் மாதங்களில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டபோதும் செப்டம்பரில் ஒருவீதத்தினால் ஓரளவு அதிகரித்தது.
இலங்கையின் தேசிய வருமானத்தில் மூன்றுவீதமாக காணப்படும் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம்,செப்டம்பரில் அதிகரித்து காணப்பட்டது.
எனினும் ஒக்டோபரில் சுற்றுலாப்பயணிகள் வருகை 21.5 வீதத்தினால் அதிகரித்ததை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஓக்டோபர் வரையிலான முதல்பத்து மாதங்களிற்கான சுற்றுலாத்துறை வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 4.9 வீதமாக அதிகரித்து காணப்பட்டது, அதாவது 258.9 மில்லியன் டொலர் அதிகரிப்பு
இந்த வருடம் இலங்கை அரசாங்கம் 5 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதையும் 3 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
