முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குவோல்வர்ஹம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுத் துறை குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் இன்றி அவர்களிற்கு தெரியப்படுத்தாமல் குற்றப்புலனாய்வு திணைக்க அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
.
சிஐடி குழுவினரின் விஜயம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.சிஐடியினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து எந்த அறிவுறுத்தல்களையும் கோரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதிபொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழு இந்த வார ஆரம்பத்தில் லண்டன் புறப்பட்டு சென்றது
சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளான
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்ஆகியோருக்கு
ஒரு குற்றப் புலனாய்வுப் பிரிவு இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவது குறித்து தெரியாது என்று சட்டமா அதிபர் திணைக்கவட்டாரங்கள் தெரிவித்தன. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் இந்தக் குழுவை சுயாதீனமாக அனுப்ப சிஐடி முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை இங்கிலாந்திற்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் சிஐடி குழு வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. 2023 செப்டம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து சென்றவேளை சிறிசேனா இங்கிலாந்துக்கான உயர் ஸ்தானிகராக இருந்தார். அங்கு அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் சிறிசேன லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனிற்கான இரண்டு நாள் விஜயத்தின் போது அரசநிதியில் 16.6 மில்லியனை செலவிட்டார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இது அவரது தனிப்பட்ட விஜயம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்