இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து அறிந்துகொள்வதற்காக இஸ்ரேலின் சுற்றுலாத்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் 33 பேர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் பத்து நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை வாய்ப்புகள் குறித்து ஆராய்வார்கள்.
இலங்கையில் இவர்கள் அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட முக்கிய இடங்களிற்கு விஜயம் மேற்கொண்டு சுற்றுலாத்துறை கூட்டாண்மை,குறித்து ஆராய்வார்கள்.