நெடுந்தீவுப் பிரதேசத்தில் பரவி வரும் ஆப்பிரிக்கா நத்தை இனம் பற்றிய கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் N.பிரபாகரன்தலைமையில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இன்றைய தினம் (19.11.2025) இன்று புதன்கிழமை நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி இக்கலந்துரையாடலில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு பிரதேச மட்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
