இலங்கை கடனை திருப்பி செலுத்துகின்றது அதனை சரியான முறையில் செய்கின்றுத எனநிதியமைச்சின் செயலாளர் ஹர்சன சூரிய பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை கடனை திருப்பி செலுத்துவதற்காக 2028 வரை காத்திருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இலங்கை ஏற்கனவே தனது கடப்பாடுகளை நிறைவேற்றிவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
2028ம் ஆண்டிலேயே இலங்கை தனது கடனை மீள செலுத்த ஆரம்பிக்கும் என்பது ஒரு கற்பிதம்,என தெரிவித்துள்ள அவர் நாங்கள் தொடர்ச்சியாக கடனை திருப்பி செலுத்திவருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
2024 பில்லியன் டொலர்களை செலுத்தினோம் 2025 இல் மேலும் பில்லியன் டொலர்களை செலுத்தினோம் என தெரிவித்துள்ள அவர் இந்த கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
