புறக்கோட்டை மிதக்கும்சந்தையை ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 160 மில்லியன் டொலர் குத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் நகரஅபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்திவருகின்றது.

ஜப்பானை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் மிதக்கும்சந்தை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் இரவுசந்தையை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளார்.
மிதக்கும் சந்தை தற்போதைய நிலையிலேயே குத்ததைக்கு விடப்படும்இஅந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிற்கு இழப்பீட்டினை வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜப்பானை சேர்ந்த முதலீட்டாளர் ஏற்கனவே 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்தியுள்ளார்.
புறக்கோட்டை மிதக்கும் சந்தை முதலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு ரூ. 344 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. இந்த வளாகம் ஆறு ஏக்கர் பரப்பளவில் உள்ளது இதில் இரண்டு பெரிய உணவகங்கள் உட்பட 92 கடைகள் உள்ளன அவற்றில் 10 கடைகள் பெய்ரா ஏரியில் அமைந்துள்ளன.

கொவிட்மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வர்த்தகம் காரணமாக மிதக்கும் சந்தை சிரமப்பட்டுஇ குறிப்பிடத்தக்க இழப்புகளைஎதிர்கொண்டது.. ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தாலும் வீதியோரதெரு விற்பனையாளர்கள் அங்கு செயல்பட அனுமதிக்கப்பட்டபோது இந்த திட்டம் அதன் கவனத்தை இழந்தது.
சந்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாமல் இயங்கி வருகிறது. ஜப்பானிய முதலீட்டாளர் ஒரு புதிய திட்டத்தின் கீழ் முழு வளாகத்தையும் நவீனமயமாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.