இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்புரி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ரூ.43 மில்லியன் பெறுமதியான பொருட்களை கையளித்தது அனைத்து சீன பெண்கள் சம்மேளனம்

இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்புரி மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 1,000,000 யுவான் பெறுமதியான (ஏறத்தாழ ரூ.43 மில்லியன்) ஒருதொகுதி உபகரணங்களை அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் நன்கொடையாக வழங்கியது.

இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு தாய் சேய் அறை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ள பெண்களுக்கான சுகாதார உற்பத்திகள் உள்ளிட்டவை இந்த நன்கொடையில் உள்ளடங்கியுள்ளன.
இந்த உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவர்கள் இந்த உபகரணங்களை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரிடம் வழங்கிவைத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, ஆழமான நட்புறவின் வெளிப்பாடாக இந்த நன்கொடை அமைந்துள்ளது என்றார்.


பெண்கள் மற்றும் சிறுவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது பகிரப்பட்ட முன்னுரிமையாக உள்ளது எனச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இதற்கு அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய கௌரவ அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையிலான இந்த நன்கொடைக்கு நன்றி பாராட்டினார். நன்கொடையாக வழங்கப்படும் பொருட்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய திட்டங்களை நேரடியாக வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர்  கீ சென்ஹொங் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சீனாவும் இலங்கையும் நீண்ட நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் இந்த நன்கொடையானது பெண்கள் மற்றும் சிறுவர்களை வலுவூட்டுதல், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சீனா உறுதியாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும், அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்திற்கும் இடையில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. பாடசாலை சீருடைகள் வழங்குதல் மற்றும் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது உள்ளிட்ட ஒத்துழைப்புக்கு சீன அரசாங்கம் இந்தச் சந்திப்புக்களின் போது உறுதியளித்திருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்